,

Garlic – வெள்ளை பூண்டு

Availability:

Out of stock


Rs20.00Rs400.00

பூண்டின் நன்மைகள், பயன்கள்

பூண்டு, இதய நோய்களை தடுப்பது, நீரிழிவு நோயாளிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது, பல்வேறு புற்றுநோய்களை தடுப்பது என பலதரப்பட்ட ஆரோக்கிய நன்மைகளை அளிக்கின்றது; ஆய்வு படிப்பினைகளின் அடிப்படையில், இங்கு பூண்டு வழங்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து விளக்கப்பட்டுள்ளன.

நன்மை 1: உடல் எடை குறைதல்

நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பும் நபராக இருந்தால், நிச்சயம் பூண்டினை உட்கொள்ள வேண்டும்; ஏனெனில், உடல் எடை அதிகரிப்பின் ஆணி வேர் காரணத்தை கண்டறிந்து, அதனை களைந்தெறிய பூண்டு உதவுகிறது; இது கெட்ட கொழுப்புகள் மற்றும் அடிபோஜெனிக் திசுக்கள் உடலில் உருவாவதை தடுத்து, தெர்மோஜெனிசிஸ் திசுக்களின் உருவாக்கத்தை அதிகரிக்கிறது

உடல் எடை குறைக்க எடுத்துக்கொள்ள வேண்டிய பூண்டின் அளவு
உடல் எடையை குறைக்க 3-4 பல் பூண்டுகளை சாப்பிடலாம்.

நன்மை 2: இரத்த அழுத்தம்

உடலின் இரத்த அழுத்த அளவை 10 mmHg (சிஸ்டோலிக் அழுத்தம்) இதிலிருந்து 8 mmHg (டயஸ்டாலிக் அழுத்தம்) ஆக குறைக்க, ஒரு முதிர்ந்த பூண்டில் இருக்கும் பயோ-ஆக்டிவ் சல்ஃபர் மற்றும் S-அல்லில்சிஸ்டெய்ன் போன்ற பொருட்கள் உதவுகின்றன. உடலில் இரத்த அழுத்தம் ஏற்பட முக்கிய காரணமாக திகழ்வது சல்ஃபர் ஆகும் மற்றும் ஆர்கானிக் சல்ஃபரை உடலுக்கு அளிப்பதன் மூலம் உடலில் இரத்த அழுத்த அளவை ஒரு கட்டுக்குள் வைக்கலாம். சூடு சிகிச்சையை மேற்கொண்டால், அல்லிசின் அழிந்துவிட வாய்ப்புண்டு.

இரத்த அழுத்தத்தை குறைக்க தேவையான பூண்டின் அளவு
சமைக்கப்படாத அல்லது காயவைக்கப்பட்ட பூண்டினை உண்டால் தான், அல்லிசின் சத்தினை பெற முடியும்.

நன்மை 3: நீரிழிவு நோய்/ சர்க்கரை நோய்

உடலின் வளர்சிதை மாற்ற குறைபாட்டால் ஏற்படும் ஒரு நோய் தான் நீரிழிவு நோயாகும்; இது ஏற்பட முக்கிய காரணமாக திகழ்வது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை ஆகும். இந்திய IICT -இல் இருக்கும் அறிவியலாளர்கள், எலிகளுக்கு வெள்ளைப்பூண்டினை அளித்து நடத்திய சோதனையில், எலிகளின் உடலில் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் மற்றும் ட்ரைகிளிஸெரைட் போன்றவற்றின் அளவு குறைந்து காணப்படுவதாகவும், இன்சுலின் அளவு அதிகரித்திருப்பதாகவும் கண்டறிப்பட்டுள்ளது . அதனால், நீரிழிவு நோயின் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் ஒருவர் அல்லது சர்க்கரை நோயாளி, இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை குறைத்து, இன்சுலின் அளவை அதிகரிக்க பூண்டினை சாப்பிடலாம்.

சர்க்கரை நோய்க்கான பூண்டின் அளவு
நீரிழிவு நோயை தடுக்க அல்லது அதை எதிர்த்து போராட, சமைக்கப்படாத 2-3 பூண்டுப்பற்களை உட்கொள்ளலாம்.

நன்மை 4: இருமல் மற்றும் சளி

வெள்ளைப்பூண்டில் இருக்கும் நோய்த்தொற்றுகளை எதிர்க்கும் பண்புகள், உடலில் ஏற்படும் இருமல் மற்றும் சளி போன்ற சாதாரண நோய்களை நொடியில் குணப்படுத்தி விடும் தன்மை கொண்டவை. பூண்டினை பயன்படுத்தி, அதன் ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகளை கொண்டு இந்த இருமல், சளி பிரச்சனைகளை எளிதில் விரட்டிவிடலாம்.

இருமல் மற்றும் சளியை போக்க பூண்டினை எடுத்துக்கொள்ள வேண்டிய அளவு
வெற்றிலையின் காம்பு, பூண்டு, திப்பிலி, வசம்பு ஆகியவற்றை அரைத்து, வெந்நீரில் சேர்த்து கஷாயம் செய்து பருகலாம்.

நன்மை 5: கொலஸ்ட்ரால்

அமெரிக்கன் அறிவியலாளர்கள், கொலஸ்ட்ரால் அதிகம் கொண்ட மனிதர்களை பூண்டினை உட்கொள்ள வைத்து நடத்திய சோதனையில், ஹைப்பர் கொலஸ்டெரொலெமிக் அளவினில், LDL கொலஸ்ட்ரால் 10% குறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. எலிகளில் நடத்தப்பட்ட சோதனையில், கல்லீரல் செல்களில் கொழுப்பு சேர்வது தடுக்கப்படுகிறது; ஆராய்ச்சியாளர்கள் மேலும் நடத்திய சோதனைகளில், வெள்ளைப்பூண்டில் காணப்படும் நீர் மற்றும் கொழுப்பில் கரையக்கூடிய உறுப்புகள், உடலில் கொலஸ்ட்ரால் சேர்வதை 20-60% குறைக்க உதவுகின்றன என்பது போன்ற தகவல்கள் வெளிவந்துள்ளன .

இரத்த அழுத்தத்தை குறைக்க தேவையான பூண்டின் அளவு
சமைக்கப்படாத 1-2 பூண்டுப்பற்களை, தினந்தோறும் உண்டு வந்தால், LDL கொழுப்பின் அளவு குறையலாம்.

நன்மை 6: இதயம்

ஆராய்ச்சியாளர்கள், வெள்ளைப்பூண்டு எல்லாவித இருதய நோய்களையும் தடுக்கும் தன்மை கொண்டது என்பதற்கான எல்லா சான்றுகளையும் கொண்டுள்ளார்; பூண்டு, உடலின் கொலஸ்ட்ரால், கொழுப்பு, ட்ரைகிளிஸெரைட் சீரம், பிளேட்லெட் திரட்டல் போன்றவற்றை குறைத்து – ஆன்டி ஆக்சிடென்ட் செயல்பாடுகளை அதிகரிக்க உதவுகிறது. அதிரோஸ்கிளிரோசிஸ் எனும் குறைபாட்டிற்கு எதிராக போராடும் தன்மை கொண்டதாக வெள்ளைப்பூண்டு விளங்குகிறது.

இதய நோய்களை தடுக்க, எடுத்துக்கொள்ள வேண்டிய பூண்டின் அளவு
காலையில் நடைப்பயிற்சி அல்லது ஜாக்கிங் செய்யும் முன், பூண்டினை பச்சையாக உண்பது இதய நோய்களை தூரத்தில் வைக்க உதவும்.

SKU: N/A Categories: ,
Kilos

, , , ,

Based on 0 reviews

0.0 overall
0
0
0
0
0

Be the first to review “Garlic – வெள்ளை பூண்டு”

There are no reviews yet.

Vendor Information